Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் கடும் சரிவு …!!

இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை நோக்கிச் செல்வதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு விரைவாக பரவி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 70க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை , கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகின்றது.

இதனால் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாமே கதிகலங்கி நிற்கின்றது. நேற்று இந்திய பங்குசந்தை சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிந்து கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த்தது. கடந்த 12 ஆண்டு இல்லாத அளவு சரிவு கண்டுள்ளதால் முதலீட்டாளர்களுக்கு 11.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை தொடக்கம் முதலே மீண்டும் வர்த்தகம் சரிவை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3177 புள்ளிகள் சரிந்து 30,320 புள்ளிகளுக்கு , தேசிய பங்குச்சந்தையான நிப்டி 966 புள்ளிகள் சரிந்து 8,624 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

Categories

Tech |