மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிக்கொண்டு இருக்கின்றது.
இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு நிற்கின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 12,432 புள்ளிகளில் விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க தேர்தலில் உறுதியான முடிவுகள் வெளியான நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணமுடிகிறது
அமெரிக்கா அதிபராக மீண்டும் அரியணை ஏற போவது ட்ரம்ப்பா – ஜோ பைடனா என்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி பங்குசந்தைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. நேற்றைய தினம் முதல் ஜோ பைடன் அதிபராக போகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினமே பல்வேறு வகையான மாறுதல்களை உலகளவிலான பங்குச் சந்தைகள் எதிரொலிக்க தொடங்கின.
தற்போது விடுமுறைக்குப் பிறகு தொடங்கி இருக்கக்கூடிய இந்திய பங்குச்சந்தைகள் சனி நாயிரு பிறகு இருக்கக்கூடிய இந்திய பங்குச்சந்தைகள் உச்சத்தை தொட்டு நிற்கின்றன. மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் உயர்ந்து வர்த்தகத்தை தொடங்கி இருக்கின்றன