Categories
உலக செய்திகள்

சீனாவில், இந்திய மாணவர் மர்ம மரணம்.. வெளிநாட்டு மாணவர் கைது.. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்..!!

இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர், சீன பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில் அங்கு, மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் இருக்கும் கயை என்ற மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் அமன் நாக்சென், சீன நாட்டின் தியான்ராஜ் நகரத்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். கொரோனா தொற்று பரவ தொடங்கியவுடன் சீனாவில் தங்கியிருந்த இந்திய மக்கள் சுமார் 23,000 பேர், அவரவர் சொந்த ஊருகளுக்கு சென்றுவிட்டனர்.

எனினும், ஒரு சில நபர்கள் மட்டும் சீனாவில் இருந்தனர். எனவே, அமன் நாக்சென்னும் அங்கேயே இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று அவரின் அறையில் மர்மமாக உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அறிந்த, குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில்,  தற்போது சந்தேகத்தின் பெயரில், அந்த பல்கலைகழகத்தை சேர்ந்த வேறு நாட்டு மாணவர்  கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |