அமெரிக்காவில் கம்ப்யூட்டர்களை சேதப்படுத்தியதற்காக இந்திய மாணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அல்பேனியில் இருக்கும் செய்ன்ட் ஜோஸ் கல்லூரியில் இந்திய மாணவர் விஷ்வநாத் அகுதோடா (வயது 27) படித்து வருகிறார். இந்த மாணவர் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி கல்லூரியில் உள்ள 66 கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டர்கள் உள்ளிட்டவற்றில் கில்லர் யு.எஸ்.பி (Killer USB) எனும் சாதனத்தை பயன்படுத்தி, வேண்டுமென்றே யுஎஸ்பி போர்ட்களை சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அதன் பின் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி வட கரோலினாவில் விஷ்வநாத் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் விஷ்வநாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஓராண்டு சிறை தண்டனையுடன் இந்திய மதிப்பில் 41,00,000 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.