Categories
உலக செய்திகள்

“நல்லதுக்கு காலமில்லை!”.. புறாவுக்கு இரை வைத்தது குற்றமா..? இந்திய மாணவருக்கு நேர்ந்த நிலை..!!

மான்செஸ்டரில் புறாவுக்கு இரை வைத்த மாணவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரளாவை சேர்ந்த மாணவர் ரிஷி பிரேம். இவர்  Piccadilly பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது இவரின் அருகில் புறாக்கள் வந்து அமர்ந்திருக்கிறது. எனவே தான் வைத்திருந்த உணவில் பாதியை புறாக்களுக்கு இரையாக போட்டுள்ளார்.

அதில் சில நடைபாதையில் விழுந்திருக்கிறது. இதைப்பார்த்த அமலாக்க அதிகாரி, குப்பைகளை நடைபாதையில் கொட்டியதாக மாணவர் ரிஷிக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதித்துவிட்டார். எனவே ரிஷி, இந்திய நாட்டில், புறாக்களுக்கு இரை வைப்பது வழக்கமானது தான் என்று கூறியிருக்கிறார்.

எனினும் மான்செஸ்டர் நகர சபை அதனை ஏற்க மறுத்துவிட்டது. புறாக்களுக்கு மக்கள் இரை வைப்பது, இங்கு தடை செய்யப்பட்ட ஒன்று. குப்பைகளை வீசுவதற்கு சமம் என்று தெரிவித்துவிட்டனர். மேலும் ரிஷி ஏழை மாணவர் என்பதால் அவ்வளவு தொகை அவரிடம் இல்லை.

மேலும் தற்போதுள்ள நிலையில் கேரளாவில் இருக்கும் தங்கள் குடும்பத்தினரிடமிருந்தும்  பணத்தை அனுப்பிவைக்குமாறு கேட்க முடியாத நிலையில் இருக்கிறார். இந்நிலையில்  அவர் கற்கும் பல்கலைக்கழகம், அவருக்கு உதவுவதாக தெரிவித்திருக்கிறது. எனவே அவர் அபராதத்தை செலுத்தி விடலாம் என்று நம்புவதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |