Categories
உலக செய்திகள்

இந்தியா தடை செய்த செயலிகள்.. சீன கல்வி நிறுவனங்களின் வலியுறுத்தல்.. இந்திய மாணவர்களின் கல்வி பாதிப்பு..!!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலிகளை சீனாவின் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துவதால் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியாவில் சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சீனாவில் இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயில்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனாவினால் மாணவர்கள் நாடு திரும்பி விட்டனர். தற்போது இணைய வழி மூலமாக கல்வியை தொடர்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையில், லடாக் எல்லையில் நடந்த மோதலுக்கு பின்பு 250 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதில் சூப்பர்சாட், ஜிங்சாட், வீசாட் போன்ற செயலிகளை சீனாவின் பல்கலைகழகங்கள் இணையவழிக் கல்விக்காக பயன்படுத்துகிறது. எனவே இந்திய நாட்டிலிருந்து கற்கும் மாணவர்களால், இங்கு அதனை பதிவிறக்கம் செய்யமுடியாது.

எனவே வருடத்திற்கு 4.5 லட்சம் ரூபாய் வரை படிப்புக்காக செலுத்துகிறோம் என்று மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இதனால் சீனாவில் பயிலும் இந்திய மாணவர்களின் சங்கம் இப்பிரச்சனையை தீர்க்க 2 நாட்டு அரசாங்கத்திடமும் வேண்டுகோள் வைத்திருக்கிறது.

Categories

Tech |