அமெரிக்கா தூதரகமானது, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் விசா பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள அமெரிக்க பணியகமானது, வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முடிந்த அளவிற்கு நிறைய மாணவர்களுக்கான விசா விண்ணப்பத்திற்கு இடம் வழங்க தீவிர பணியை மேற்கொண்டுள்ளது. இதனை அமெரிக்காவின் மூத்த அலுவலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் விசா நியமனங்கள் பெற்றிருக்கிறார்கள். வரும் நாட்களில் மேலும் பலருக்கு விசா நியமனங்கள் அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், “அனைவரும் தொழில்நுட்ப பிரச்சினைகளை சந்தித்துள்ளீர்கள், அதனை தீர்ப்பதற்காக கடின முயற்சியுடன் பணியை மேற்கொண்டு வருகிறோம், உங்களின் பொறுமை பாராட்டுதலுக்குரியது” என்று பதிவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் புறப்பட்டு செல்வதற்கு சுமார் 72 மணி நேரங்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும். அதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதாவது கொரோனா காரணமாக விசா நியமனங்கள் பெற சில விதிமுறைகள் இருப்பதால் இந்திய மாணவர்கள் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்வது தொடர்பில் கவலையடைந்துள்ளனர்.