உக்ரைன் நாட்டின் சுமி பகுதியில் மாட்டிக்கொண்ட மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு நாடுகளிடமும் வைத்த கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை என்று இந்திய தூதர் திருமூர்த்தி கூறியிருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி 13-வது நாள் ஆகிறது. அங்கு மாட்டிக்கொண்ட இந்திய மக்களை அண்டை நாடுகளின் வழியே ‘ஆபரேஷன் கங்கா’ திட்டப்படி இந்திய அரசு மீட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஐ.நா விற்கான இந்திய தூதர் திருமூர்த்தி ஐ.நா சபையில் அவசரகால கூட்டத்தில் கூறியதாவது, உக்ரைன் நாட்டில் மீதமுள்ள இந்திய மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டுகோள் வைத்தோம்.
வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள், அவர்களது சொந்த நாடுகளுக்கு செல்ல நாங்கள் உதவி செய்தோம். சுமி பகுதியில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளிடமும் கோரிக்கை வைத்தோம். எனினும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.