உலக கால்பந்து விளையாட்டில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளவரும் தற்போதைய இந்திய கால்பந்து அணியின் கேப்டனுமாக இருப்பவருமான சுனில் சேத்ரி, தற்போது விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான பூமா நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் தன்னை இணைத்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், பூமா நிறுவனத்துடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிறுவனமானது இந்த விளையாட்டுடன் நெருங்கிய தொடர்புடன் கூடியது. இந்தக் காரணத்தினாலேயே நான் தற்போது இந்நிறுவனத்துடன் இணைந்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக வலம்வரும் சுனில் சேத்ரி, இந்திய அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர். இதன் காரணமாக இவருக்கு மத்திய அரசு 2011ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும் 2019ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது.