அடுத்த ஆண்டு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் 20ஓவர் போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதை தொடர்ந்து இந்திய அணி மோத இருக்கும் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகின்றது.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என அடுத்தடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணங்கள் இருக்கின்றன. அந்தவகையில் இலங்கை அணிக்கு இந்திய அணி ஜூன் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, ஐந்து 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றது.