அமெரிக்காவில் சிறப்பு மிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியில் இந்திய பெண் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
அமெரிக்காவில் அதிக கல்வி அமைப்ப்புகளில் சிறப்புமிக்க அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியில் இந்தியாவை சேர்ந்த பெண் ரேணு கத்தோர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 61 வயதான இந்தியா பெண்மணி ரேணு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், வேந்தராகவும் இருக்கின்றார்.
கல்வித்துறையில் ரேணு ஆற்றிய பங்களிப்பு காரணமாக அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த ரேணு கான்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை முடித்துவிட்டு அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தின் அறிவியல், அரசியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலை மற்றும் பி.எச்டி பட்டங்களை பெற்றவர்.
அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ரேணு பேசுகையில், “இந்த சிறப்புமிக்க அமைப்பின் அங்கீகாரம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் அதே நேரம் ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க கல்விக்குழு ஆகியவற்றிற்கு இது அளித்த மரியாதை குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனது திறன்களை வளர்ப்பதற்கு பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளது” எனக் கூறியுள்ளார்.