இந்தியாவில் பிறந்த பெண்ணொருவர் சீனாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடங்கியிருப்பது அமெரிக்க மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
சீனாவில் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி கொரோனா தொற்று முதன்முதலாக தோன்றியது. சீன கம்யூனிஸ்ட் அரசு வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்தவர்களை கைது செய்தது. இந்நிலையில் சீனா உண்மையை மறைப்பதாகவும் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு கொரோனா பரவும் என்பதை ஆரம்பத்தில் கூறவில்லை என்றும் அமெரிக்கா சீனா மீது குற்றம்சாட்டி வருகிறது. அது மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆராய்ச்சி கூடத்தில் இருந்து செயற்கையாக உருவாக்கிய ஒன்று என அமெரிக்கா சமீபத்தில் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இந்தியாவில் பிறந்து அமெரிக்க தெற்கு கரோலினா மாகாண கவர்னராகவும் ஐநா சபையின் அமெரிக்க தூதராகவும் இருக்கும் இந்திய பெண் நிக்கி ஹாலி இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளார்.சீனா ஏற்படுத்திய இந்த நெருக்கடியான சூழலை தொடர்ந்து அந்நாட்டிற்கு எதிராக நேற்று முன்தினம் இரவு ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா என்ற கையெழுத்து இயக்கம் ஒன்றை அதிரடியாக தொடங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்துக்கான கோரிக்கையாகவும் இந்த கையெழுத்து இயக்கம் அமையப்பெற்றுள்ளது. சீனாவிற்கு எதிராக தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் ஒரு லட்சம் பேரின் கையெழுத்துக்களை பெற முடிவெடுத்துள்ளார் இந்திய பெண்ணான நிக்கி ஹாலி. கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே 40 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
கொரோனா தொற்று விவகாரத்தில் தொடர்ந்து பொய் மட்டுமே சொல்லி வரும் சீனாவை அதன் தவறுக்கு பொறுப்பேற்க வைக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் “ஸ்டாப் கம்யூனிஸ்ட் சீனா” எனும் கையெழுத்து இயக்கத்தின் கோரிக்கையாக இருக்கின்றது. இந்தியாவில் பிறந்த பெண்ணொருவர் ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக தலைமை தாங்கி கையெழுத்து இயக்கம் தொடங்கி இருப்பது அமெரிக்க மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.