உலக கோப்பை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய இந்தியர் என்ற சாதனையை ஐஸ்வர்யா நிகழ்த்தியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிசாய் மகளிர் பிரிவுக்கான உலக கோப்பை மோட்டார் வாகன பந்தயத்தின் அங்கேரியில் நடைபெற்ற இறுதி சுற்றில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே துபாயில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிசாய் முதலிடம் பிடித்து அசத்தினார்.
இந்த நிலையில் நேற்று அங்கேரியில் நடைபெற்ற இறுதி சுற்று போட்டியில் ஐஸ்வர்யா நான்காவது இடம் பிடித்தார். எனினும் இந்த தொடரில் ஒட்டு மொத்தமாக 65 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் ஐஸ்வர்யா முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.இதன் மூலம் ஐஸ்வர்யா பிசாய் மோட்டார் வாகன பந்தயத்தில் தடம் பதித்தது மட்டுமல்லாமல் , இந்தியாவிற்கே பெருமையும் சேர்த்துள்ளார்.