துபாயில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு லாட்டரியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்திருக்கிறது.
துபாயில் வாழும் இந்திய வம்சாவளியினரான Harun Sheikh என்பவருக்கு Big Ticket Abu Dhabi நிறுவனம் வாரந்தோறும் நடத்தும் மில்லியன் லாட்டரி குலுக்களின் மூலம் 2 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. Big Ticket Abu Dhabi நிறுவனம், தன் முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, “எங்களின் லாட்டரி குலுக்களில் 1 மில்லியன் திர்ஹாம் வென்றுள்ள Harun Sheikh-ற்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருக்கிறது.
பரிசுத் தொகையை வென்றது தொடர்பில், Harun Sheikh கூறியுள்ளதாவது, “நான் என் வாழ்வில் தற்போது வரை எதுவும் வென்றதில்லை. இந்த லாட்டரி குலுக்கலின் மூலம் என் வாழ்வில் மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்நிறுவனமானது டிசம்பர் மாதத்திற்கான லாட்டரியை தொடங்கிய முதல் வாரத்திலேயே Harun Sheikh பரிசுத்தொகை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.