இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், ரிஷப் பந்த்தும் களமிறங்கினார்.கேப்டன் ரோஹித் 31 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்ட, அடுத்த பந்திலே ரிஷப் பந்த் 26 ரன்னிலும், சூரியகுமார் யாதவ் 15 ரன்னிலும், ஹர்டிக் பாண்டியா 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தனர்.
அதே போல தினேஷ் கார்த்திக் 12 ரன்னும், ஹர்ஷல் படேல் 13 ரன்னிலும் ஆட்டமிழக்க, 8 ஆவது விக்கெட்டாக புவனேஷ்வர் குமார் 2ரன்னில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராடிய ஜடேஜா 46* ரன் எடுத்தார்.