Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்கள் 130 கோடி பேரும் இந்துக்கள் – மோகன் பகவத்..!!

இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது. இங்குள்ள மதம் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையைப் பொருட்படுத்தாமல் நாட்டின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் பார்க்கிறது.

Image result for Indians are 130 crore Hindus - Mohan Bhagwat

ஆர்எஸ்எஸ் ஒருவரை இந்து என்று அழைக்கும் போது, ​​இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதி அதை நேசிப்பவர்கள் என்று பொருள். இந்தியா தாயின் மக்கள் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், எந்த வழிபாட்டு முறையைக் கொண்டிருந்தாலும் அவா்களை இந்துக்களாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

Image result for Indians are 130 crore Hindus - Mohan Bhagwat

இந்தியாவின் 130 கோடி மக்களும் ஒரு இந்து சமூகம். ஆர்எஸ்எஸ் அனைவரையும் தங்கள் சொந்தமாகக் கருதுவதோடு அனைவருடைய வளர்ச்சியையும் விரும்புகிறது. அனைவரும் ஒற்றுமை கொண்டிருக்க நினைக்கிறது. நமது அமைப்பு நாட்டிற்காக வேலை செய்வதோடு, எப்போதும் தர்மமே வெல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் மற்றும் தெலங்கானா பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Categories

Tech |