இந்தியர்கள் இலங்கை நாட்டுக்கு சுற்றுலா செல்வதில் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா தொடர்பில் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள் அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதில் முதலிடத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 22,771 சர்வதேச சுற்றுலா பயணிகள் கடந்த அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு பயணித்துள்ளனர். இதன் காரணமாக இலங்கையில் கொரோனாவுக்கு பிறகு சுற்றுலா துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரஷ்யா, பாகிஸ்தான், பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அதில் மொத்த சுற்றுலா பயணிகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 37 சதவீதம் பேர் என்று தரவுகள் தெரிவிக்கின்றது.
அதனைக் கொண்டு இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்களில் முதலிடம் பிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதே சமயம் பாகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 10 மற்றும் 9 சதவீதம் வருகை புரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சுமார் 60 ஆயிரத்து 695 சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கைக்கு வழக்கமாக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 80 சதவீதம் குறைவு என்றே கூறப்படுகிறது.