உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் சிறப்பு ரயில் மூலமாக இந்திய மக்கள் மேற்குப் பகுதிகளுக்கு செல்லலாம் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து ஐந்தாம் நாளாகும் நிலை, அங்கு தீவிரமாக தாக்குதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், தலைநகரான கீவ்வில் வான்வெளி தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்கள் ராணுவத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது.
எனவே, தற்போது வரை உக்ரைனில் இருக்கும் இந்திய மக்கள் 1156 பேர் 5 சிறப்பு விமானங்கள் மூலமாக டெல்லி சென்றிருக்கிறார்கள். மேலும், ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின்படி ஹங்கேரியின் தலைநகரான பூடாபெஸ்ட் நகரில் இந்திய மக்கள் 240 பேர் ஆறாவது சிறப்பு விமானம் மூலமாக டெல்லி சென்றிருக்கிறார்கள்.
எனினும், இந்திய மக்கள் பலரும் உக்ரைனிலிருந்து வெளிவர முடியாமல் தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. எனவே, அங்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன் மூலமாக மீதமுள்ள இந்திய மக்கள் மேற்குப் பகுதிகளுக்கு சென்றடையலாம் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.