அமெரிக்காவில் இந்தியா வம்சாவளிகள் 40க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினருக்கு அமெரிக்காவில் கொரோனா இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அதிக அளவிலான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில், கேரளாவைச் சேர்ந்த 17 பேர், குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் , பஞ்சாபைச் சேர்ந்த 4 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் பலர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றும் ஒருவர் மட்டும் 21 வயது நிரம்பியவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2,108 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 5,03,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று புதிதாக 301 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,761 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, 27,314 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது.