Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவார்கள் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் உறுதி!

சீனாவில் உருவாகி உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் 3200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்தின் நிலைமை குறித்து ஓர் ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தயாரித்து வருகிறார்.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவரதன், கொரோனா தடுப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்புடன் இந்தியா தொடர்பில் உள்ளது என தெரிவித்தார். கேரளாவில் ஆரம்ப நிலை கண்ட நோயாளிகள் மற்றும் மீட்கப்பட்ட மூன்று நோயாளிகள் உட்பட இந்தியாவில் இதுவரை மொத்தம் 29 பேரிடம் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருடன் தொடர்புகொண்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் எச்சரிக்கை அடைந்துள்ள அரசு, கொரோனா வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சீனா, ஈரான், இத்தாலி, ஜப்பான் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

டெஹ்ரான் மற்றும் கோமில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பயணிகள் மற்றும் மாணவர்களை வெளியேற்றுவதற்காக அரசாங்கம் ஈரானுடன் தேவைக்கேற்ப வகையில தொடர்புகொண்டு செயல்பட்டு வருகிறது. ஈரானில் சிக்கிய இந்தியர்கள் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும் கொரோனா கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி எண் – 011 23978046 ஏற்படுத்தப்பட்டுள்ளது

Categories

Tech |