அமெரிக்காவில் வங்கிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரை மர்மநபர் சுட்டு கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஜார்ஜியா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 45 வயதாகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய கேஸ் நிரப்பும் நிலையத்திற்கு அருகிலிருக்கும் வங்கிக்கு பணம் டெபாசிட் செய்வதற்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அமித் குமார் வங்கியினுள் நுழைய முயற்சி செய்யும் போது அவரை துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
அதோடு மட்டுமன்றி அமித் குமார் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக வைத்திருந்த பணத்தையும் எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.