வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் 3 வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இன்று நடைபெறும் 3-ஆவது போட்டியையும் வென்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும். எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் 3 வீரர்கள் சாதனை படைக்க இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைப்பார். இதுவரை அவர் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் முகமது சமி 56 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இவரது சாதனையை இன்று குல்தீப் முறியடிப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதே போல இன்றைய ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 27 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் புதிய சாதனையை படைக்க இருக்கிறாரகள். அதாவது இந்த ஜோடி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 1000 ரன்கள் கடந்தால் இது ஒரு புதிய சாதனையாக இருக்கும்.