Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அடுத்த வருடம் மின் தேவை 250 ஜிகாவாட்டாக அதிகரிக்கும்…. மத்திய அரசு தகவல்….!!!!!

இந்தியாவில் கோடைகாலத்தில் தேவைப்படும் அதிக அளவிலான மின் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சார துறையைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மத்திய மின்சார துறை அமைச்சகத்தின் செயலாளர் அலோக் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 2 முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

அதன்படி முதலாவதாக போதிய மின் உற்பத்தி திறனில் கவனம் செலுத்தி, அப்போதைய சூழலில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு இரண்டாவதாக நிலக்கரி உற்பத்தியை பெருக்குவது மற்றும் அதன் விநியோகத்தை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடப்பாண்டில் ஏப்ரல் 26-ம் தேதி வரை மின் தேவை 201 ஜிகா வாட்டாக இருந்தது. மேலும் இது அடுத்த வருடம் ஏப்ரலில் 230 ஜிகாவாட் என்ற அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |