Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பந்தை பாலீஷாக்க எச்சில் போடவேண்டாம்”… புவனேஷ்வர் குமார் வேண்டுகோள்!

கொரோனா பரவி வரும் நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளர் புவனேஷ்வர் குமார் பந்தை பாலீஷாக்க அதிக எச்சில் போடவேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.  

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லி , தமிழகம் உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் என 60க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்தியாவில் முதல் பலி அரங்கேறியுள்ளது.

பிப்ரவரி 29 ம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து கர்நாடக மாநிலம் கல்புர்க்கி வந்த 75 வயதான முகமத் சித்திக் உசேன் என்பவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில்  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளர் புவனேஷ்வர் குமார் போட்டியின் போது பந்தை பாலீஷாக்க அதிக எச்சில் தடவ வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பரவாமல் தடுக்க புவனேஷ்வர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |