கொரோனா காலகட்டத்தில் பொருளாதார இழப்பை சந்தித்து இருந்த நாடு தற்பொழுது உற்பத்தியை பெருக்கி இருக்கிறது.
கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதுமே பொருளாதார இழப்பை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக இந்த வருட முதல் காலாண்டில் பெரும் பொருளாதார வீழ்ச்சி கண்டிருந்தது இந்தியா. இதன் காரணம் பொது போக்குவரத்து முடக்கம், தொழிற்சாலைகள் முடக்கம், தேவாலயங்கள் முடக்கம், பள்ளி, கல்லூரிகள் முடக்கம், இதுபோன்ற சூழ்நிலையில் நாடு முழுவதும் பொருளாதார இழப்பு மேம்பட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது அந்தநிலை சற்று மாறி உள்ளது.
அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் உள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்து வந்தன. அதில் முதற்கட்டம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு அதிக அளவு வசூல் அடைந்தது. அதன் பின் ஏப்ரல், மே மாதங்களில் பயணிகளுக்கான 33,546 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. மேலும் ஜூன் மாதத்தில் 1,20,188 வாகனங்கள் விற்பனையாகின. இது மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் போக்கால் இரண்டாவது காலாண்டில் பொருள் கொள்முதல் குறியீடு, தொழில் உற்பத்திக் குறியீடு ஆகியன உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.