செஸ் ஜீனியஸ் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்தவர். உலக செஸ் சாம்பியனாகவும் விளங்கியவர். இவரது வாழ்க்கை கதையை பாலிவுட்டில் படமாக எடுக்க உள்ளனர்.
விஸ்வநாதன் ஆனந்த், சூசன் என்கிற எழுத்தாளருடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதினார். இப்புத்தகம் பெஸ்ட் செல்லராக விளங்கியது. அந்நூலை மையமாக வைத்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் படமாக்கவுள்ளார். சென்னையை பூர்விகமாக கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் 1988-ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்தார்.
அதன் பிறகு 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். இவர் வாழ்க்கை கதையை இயக்கவுள்ள இயக்குநர் ஆனந்த் எல்.ராய் ஏற்கனவே தனுஷ் நடித்த ராஞ்சனா, தற்போது அத்ரங்கி ரே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.