Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN T20I தொடர்… தூக்கி எறியப்பட்ட கோலி…. தலைமை தாங்கும் ஹிட் மேன்..!!

வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது  

வங்கதேச அணி வருகின்ற நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) வங்கதேச அணிக்கு எதிரான  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது.

Image result for India’s squad for Test series against Bangladesh

வங்கதேசத்துக்கு  எதிரான டி 20 ஐ தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட் (wk), வாஷிங்டன் சுந்தர், க்ருனால் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, சிவம் துபே, ஷார்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Image result for India’s squad for Test series against Bangladesh

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா (wk ), ஆர். ஜடேஜா, ஆர் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ் சர்மா, சுப்மான் கில், ரிஷாப் பன்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Image result for India’s squad for Test series against Bangladesh

இதில் டி 20 தொடருக்கான போட்டியில் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் விராட் கோலி அணியை வழிநடத்துகிறார். மேலும் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் இரண்டிலுமே ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட் ஆகிய இருவரும் இடம் பிடித்துள்ளனர்.

ஏற்கனவே வங்கதேச அணி  டி 20 ஐ தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இவ்விரு அணிகளுக்கும் வருகின்ற நவம்பர் 3-ஆம் தேதி முதல் டி 20 போட்டி நடைபெற உள்ளது.

Categories

Tech |