இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, இந்த ஆண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசு, சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்,பல்வேறு செயல்களில் இறங்கியது .
இதனால் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சென்ற ஏப்ரல் மாதம் வரை உள்ள காலத்தில் , 3 கோடியே 21 லட்சம் டன்களாக சர்க்கரை உற்பத்தியாகி பெருகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் அதிகமாகும் .