ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்படும் பதற்ற நிலை வருத்தமளிப்பதாக கூறியிருக்கிறார்.
ஐ.நா சபையின் இந்திய தூதரான திருமூர்த்தி, இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, இந்தியா வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கான சுழற்சி முறையில் தலைவராக பதவியேற்கவிருக்கிறது. ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் பாகிஸ்தான் நாட்டில் சாதாரணமாக இயங்கி வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா தங்கள் படைகளை திரும்பப் பெற்றதைத்தொடர்ந்து அங்கு ஏற்படும் பதற்றமான சூழல் வருத்தமளிக்கிறது. தீவிரவாதம் பிரிவினை இல்லாமல் சுதந்திரமாக ஆப்கானிஸ்தான் இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். ஆப்கானிஸ்தானின் நிலை தொடர்பில் பாதுகாப்பு கவுன்சிலில் கட்டாயமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.