Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3 கோடி கொரோனா பரிசோதனை… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் தற்போது வரை மூன்று கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. மருத்துவ பரிசோதனையின் இறுதிக் கட்டங்களில் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த தடுப்பு மருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதனால் தற்போதைய கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவையே முக்கிய காரணிகளாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அதனால் கொரோனா மாதிரிகள் பரிசோதனையை உலக நாடுகள் அதிக அளவில் மேற்கொண்டு கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து வருகின்றன.

இந்தியாவின் தினம்தோறும் பத்துலட்சம் கொரோனா  பரிசோதனைகளை செய்வதை இலக்கமாக கொண்டு சுகாதாரத்துறை அமைச்சகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது தினமும் 7 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை மூன்று கோடியை எட்டி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனைகள் மூலம் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தவும், உயிரிழப்பு எண்ணிக்கைகளை குறைக்கவும் முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |