இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88, 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 88,600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,92,533 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 49,41,628 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் தற்போது 9,56,402 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,124 பேர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94,503ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.