இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 லட்சத்து 32 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 87 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
65 லட்சத்து 24 ஆயிரத்து 596 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 837 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும். பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 998 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.