Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம் ….!!

இந்தியாவைப் புற்றுநோய் பாதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 10 சதம் உயர்ந்திருப்பதாக ICMR தெரிவித்துள்ளது.

ICMR மற்றும் நோய்கள் தொடர்பான தகவல் திரட்டும் தேசிய மையம் இணைந்து நடத்திய ஆய்வில் 2020 ஆம் ஆண்டில் 13.9 லட்சம் நபர்கள் புற்றுநோய் தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும் இது 2025 ஆம் ஆண்டில் 15.7 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012- 16-ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட தகவலை புற்றுநோய் பாதிப்புகள் பெண்களுக்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இந்த சூழலே வரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்களைப் பொறுத்தவரை வாய், நுரையீரல், வயிற்றுப் புற்றுநோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புள்ளதாகவும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்குவதாகவும் ICMR  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |