Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் …? ஆய்வில் கிடைத்த பதில்….!!

இந்தியாவில் கொரோனா தொற்று முடிவுக்கு வர இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை அளவு அடர்த்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி மும்பை, டெல்லி, அகமதாபாத், தானே ஆகிய நகரங்களில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டு தற்போது சரிவை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் மையப் பகுதியான சென்னையில் சமீபத்திய நாட்களில் தொற்று பரவல் குறைந்துள்ளதாகவும் அக்டோபர் தொடக்கத்தில் சென்னை நகரம் தொற்றில் இருந்து விடுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று ஜெய்ப்பூர், சூரத், போபால், இந்தூர் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்களில் அக்டோபர் முதல் பாதியில் கொரோனா பரவல் முடிவுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று  முடிவுக்கு வர இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Categories

Tech |