இந்தியாவின் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது நேரு காட்டிய அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. தன் குழந்தையை தாண்டி அனைத்து குழந்தைகள் மீதும் நேசத்தை வெளிப்படுத்தியதையே நேருவின் வரலாறு காட்டுகிறது. இன்றைய தினத்தில் குழந்தை தினம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம். சட்டென இலகிவிடும் மனம் படைத்தவரை குழந்தை மனம் கொண்டவன் என்று தான் அனைவரும் கூறுகிறோம். கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான். நாடு முழுவதும் உள்ள குழந்தைகள், இளைஞர்களின் நலம், உடல்நிலை, கல்வி முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.
அதனை தொடர்ந்து பணிகளுக்கு இடையிலும் குழந்தைகளுடன் உரையாடுவதை நேர வழக்கமாக வைத்திருந்தார். ஜவஹர்லால் நேரு அரசியல் துறையில் தேர்ச்சியும் அனுபவம் எத்தனை பெற்றிருந்தாலும் உள்ளத்தால் குழந்தை மனதுடனேயே இருந்தார். இதனால்தான் குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதனால் தான் இன்று நம் நாட்டு குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அன்போடு அழைக்கிறது. அதனைத் தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மீது நேருவும் நேரும் மீது குழந்தைகளோ அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்த நாளை என்றும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்று சொல்லில் உள்ள உண்மை தெளிவு படுத்துவதற்காக தான் குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியம் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் நாடு முழுவது குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் குழந்தை தொழிலாளர் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிதளமாக விளங்குவது குழந்தைகள் பருவத்தில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள்தான். குழந்தை பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். புத்தகங்கள் மட்டுமே சிறந்த கல்வி என்ற மனநிலை மாறி தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும்ஜமனப்பான்மையும் வளரும். மேலும் இன்றைய குழந்தைகள் தினத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் தங்கள் குறைகளை நீக்கி குழந்தைகளின் ஆசைகளையும், ஆர்வத்தையும், மனநிலையும், அணுகுமுறையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன்படி அவர்களுக்கான பாடத்தை போதிக்க வேண்டும் அவ்வாறான அணுகுமுறையை குழந்தைகளின் நாளைய ஆக்கபூர்வமான சாதனைகளுக்கு வித்தாக அமையும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.