இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக, குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தைப் பிரதமர் மோடி இன்று அறிவிக்கிறார். இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது குறித்து குஜராத் அரசு வெளியிட்ட செய்தியில், மொதேரா கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளில் சோழர் பேனல்கள் 24 மணி நேரமும் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த கிராம மக்களுக்கு இலவசமாக சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படும்.
இதனையயடுத்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் மெதேராவில் உள்ள சூரிய கோவிலுக்கு 3 டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த 3 டி திட்டத்தை பிரதமர் மோடி இன்று அர்ப்பணிக்கிறார். இதன் மூலம் சூரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதன் வரலாற்றை அறிய உதவும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் பாரம்பரிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. விளக்குகள் ஏற்றப்படுவதை பார்க்க, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்லலாம். மேலும் 3 டி தொழில்நுட்பம் தினமும் மாலையில் இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.