Categories
உலக செய்திகள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை…!!!

இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் குறித்து ஆய்வு செய்த அறிக்கையை  வெளியிடுவது வழக்கம் .1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் தவறாமல் ஆணையம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வந்துள்ளது.மேலும் ‘இந்தியா வங்காளதேசம் சூடான் ஈரான் ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஜப்பான் மற்றம் ஆப்கானிஸ்தான் உட்பட 50 நாடுகளின் ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டு சீனா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான ஆய்வறிக்கை ஐ.நாவில் தாக்கல் செய்யள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக 2021 – 2022ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக சரிவு அடைய வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். மேலும் இந்த பொருளாதார வளர்ச்சி 2019 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் மிக குறைவாக காணப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

சீனா கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டுள்ளது மற்றும் 2020 ஆம் ஆண்டில் நான்காம் காலாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இருந்த வளர்ச்சி நிலையை மிக வேகமாக தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2021 ஆம் ஆண்டு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளனர்.

கொரோனா தொற்று  காரணமாக பிராந்தியத்தில் மீண்டும்  8.9 கோடி மக்கள்  வறுமைக்கு தள்ளப்பட்டு நாள் ஒன்றுக்கு 1.90 டாலர்கள்  (145 ரூபாய்) குறைவான வருமானத்தில் அவரவர்களின் வாழ்க்கையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |