Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் சுகாதார அமைப்பு வலுவானது – ஹர்ஷ்வர்தன் பெருமிதம்…!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைய நாட்டின் வலுவான சுகாதார அமைப்பே காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு  ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

டெல்லியில் எய்ம்ஸ்  மருத்துவமனையின் 65 வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாக கூறினார்.

இறப்பு விகிதமும்  படிப்படியாக குறைந்து வருவதாகவும் இது இந்தியாவின் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றிவரும் கட்டுப்பாட்டு உக்தியின் வெற்றியைக் காட்டுவதாகவும் கூறினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைய நாட்டின் வலுவான சுகாதார அமைப்பே காரணம் என்றும் திரு ஹர்ஷ்வர்தன் பெருமிதம் கூறினார்.

Categories

Tech |