இந்தியாவில் விண்வெளி சூழலியல் மேம்பாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மீது கவனம் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய விண்வெளி பொருளாதாரத்தில் தனியார் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் மத்திய அரசின் நேரமறையான திட்டங்களின் காரணமாக இந்தியாவின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு 9.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம், 2025 ஆம் ஆண்டு 12.8 மில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் மற்றும் அது குறித்த திட்டங்கள் வருகின்ற 2025 இல் 4.6 பில்லியன் டாலர் அளவுக்கு நில பரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பிரிவு 4 பில்லியன் டாலர் அளவுக்கும், செயற்கைக்கோள் உற்பத்தி பிரிவு 3.2 பில்லியன் டாலர் அளவுக்கும், செயற்கைக்கோள் செலுத்துதல் பணிப்பிரிவு உறுப்பில் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது. இதில் செயற்கைகோள் செலுத்தல் பிரிவு கடந்த 2020 ஆம் ஆண்டு 600 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்குள் 13% அதிகரித்து ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து குறைந்த விலையிலான செயற்கைக்கோள் செலுத்தும் ராக்கெட் உற்பத்தியை பெரும் அளவில் அதிகரிப்பதன் மூலமாக உலகளாவிய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விண்வெளி உற்பத்தி அமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு இந்திய தனியார் நிறுவனங்களிடம் எழுந்து உள்ளது. அதன்படி நாடு முழுவதும் விண்வெளி தொழிற் பூங்காக்களை அமைப்பதன் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புசங்கிலியை மேம்படுத்த முடியும் என்பதோடு உற்பத்தியும் ஊக்குவிக்க முடியும். இதன் மூலம் இந்திய விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சர்வதேச அளவிலான புத்தாக்க நிறுவனங்களை இந்தியா ஈர்க்க முடியும். மேலும் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கு புதிய வருவாய் வாய்ப்புகளை அளிக்கக்கூடிய, முக்கியத துறையாக செயற்கைக்கோள் செலுத்தும் விரிவு வளர்ந்து வருகிறது. இந்த துறையில் 2021 ஆம் ஆண்டில் நூற்றுக்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்கள் ரூ.560 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.