இந்தியாவிற்கு சவால் கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 700 கோடி டாலர் செலவில் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க உள்ளது.
இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் கடற்படையை பலப்படுத்துவதற்காக 8 நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடமிருந்து பாக்கிஸ்தான் வாங்க உள்ளது. ஒருபுறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தையில் இருக்கையில் பாக்கிஸ்தான் மறுபுறம் தனது கடற்படையை பலப்படுத்த 700 கோடி அமெரிக்க டாலருக்கு சீனாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் 8 “யுவான்” ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களும், 4 பீரங்கி கப்பல்களும், மேலும் ஆயுத தளவாடங்கள் சீனாவிடமிருந்து வாங்குகிறது. யுவன் ரக நீர்மூழ்கி இக்கப்பல்கள் உலகிலேயே அதிவேகமாக செல்பவையாகும். அதோடு 2022-2023 4 நீர்மூழ்கி கப்பல்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் கராச்சியில் 4 கப்பல்கள் கட்ட படுவதாக உள்ளது.
இதனைதொடர்ந்து பாகிஸ்தான் வாங்க இருக்கும் இந்த பீரங்கி கப்பல் 4000 கடல் மைல் வேகத்தில் செல்ல கூடியதால் இக்கப்பல் தரையில் இருந்து விண்ணில் செலுத்த கூடிய ஏவுகணைகள் நீர்மூழ்கி கப்பல்கள் எதிர்ப்பு ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் தன்னிடமுள்ள ஐந்து பிரான்ஸ் தயாரிப்பு அகோஸ்டா -90பி’ ரக நீர்மூழ்கி கப்பல்களை துருக்கி உதவியால் மேம்படுத்த உள்ளது. தற்போது அந்நாட்டுடன் 1.5 கோடி அமெரிக்க டாலர்களை கொண்டு 4 நீர்மூழ்கி கப்பல்களை எதிர்க்கும் பாதுகாப்பு கப்பல்கள் வாங்க உள்ளது.