இலங்கை அரசு வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய உள்ளதாக எதிர்கட்சி எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ கண்டம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முழு வான் பரப்பை பாதுகாப்பு கட்டமைப்பு என்ற பேரில் இந்தியாவிற்கு விற்பனை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “இந்தியா கடல்சார் மீட்பு பணிகளுக்காக ஒருங்கிணைப்பு மையம் அமைக்க இலங்கைக்கு 6 லட்சம் டாலர் அளித்து கண்காணிப்பு விமானத்தையும் வழங்கியது. இதனால் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் இலங்கையின் வான் பகுதி வரும்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் இதற்கு இலங்கை அரசு “நாட்டின் வளங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படவில்லை” என்றும் மறுப்பு கூறியுள்ளது