Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எச்சரிக்கை…. மீண்டும் வம்பிழுக்கும் சீனா….!!

லடாக் யூனியன் பிரதேசம் அமைக்கப்பட்டது சட்டவிரோதம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீன ராணுவத்துடன் நேற்று நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் இத்தகைய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. லடாக் உட்பட எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சவு லிஜியன் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது சட்டவிரோதம் என்றும் எல்லைப்பகுதிகளில் இந்தியா மேற்கொண்டு வரும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். இந்த நடவடிக்கைகள் இரு நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையூறை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே நேற்று 12 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாகவும் இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் இருநாட்டு ராணுவமும் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. சீன ராணுவத்தின் இந்த அறிக்கைக்கு நேர் மாறான கருத்தை வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |