இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படுவதால் ஹாங்காங் அரசு விமான சேவைக்கு தடைவிதித்துள்ளது.
சீனாவில் இருந்து கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸின் பாதிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்திருந்தது. ஆகையால் மக்கள் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனவைரஸ் 2-ம் அலை காட்டுத்தீ போல் பரவி கொண்டு வருகிறது.
ஆகையால் பல நாடுகள் இந்தியாவுடன் கூடிய விமான சேவையை ரத்து செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது ஹாங்காங் இந்தியாவுடானான் அனைத்து
விமான சேவைகளையும் ஏப்ரல் 20 முதல் மே 3 வரை ரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் உறுதியாக கூறியுள்ளது.
இதற்கு முன்பு பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு இடையேயான விமான சேவையை ரத்து செய்வதாக தெரிவித்திருந்தனர். மேலும் மும்பையிலிருந்து ஹாங்காங்கிருக்கு செல்லும் விஸ்தரா விமானங்களில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து விஸ்தரா விமானத்தையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.