Categories
உலக செய்திகள்

“நான் ஒரு பெண், இது கொடுமையானது!”.. ஈரான் வீராங்கனை மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..!!

ஈரான் கால்பந்து பெண்கள் அணியின் கோல்கீப்பர் சோஹ்ரே கவுடேய் மீது பாலின சரிபார்ப்பு சோதனை மேற்கொள்ள ஜோர்டான் கால்பந்து சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெண்கள் ஆசிய கால்பந்து கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியானது, சமீபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், ஈரான் பெண்கள் கால்பந்து அணியானது, ஜோர்டான் அணியை, பெனால்டி ஷூட் அவுட்டில், 4-2 என்ற கோலில் வீழ்த்தி முதல் தடவையாக ஆசிய கோப்பைக்கு முன்னேறியது.

இப்போட்டியில், ஈரானின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் கோல் கீப்பரான சோஹ்ரே கவுடேய். இந்நிலையில், இவர் மீது, ஜோர்டான் கால்பந்து சங்கமானது, அதிகாரப்பூர்வமான  பாலின சரிபார்ப்பு சோதனை செய்வதற்கான விசாரணை செய்யுமாறு ஆசிய கால்பந்து கூட்டமைப்பை வலியுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பில் ஜோர்டான் கால்பந்து சங்கத்தின் தலைவரான அலி பின் ஹுசைன், தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, முன்பிருந்தே, பாலின மற்றும் ஊக்கமருந்து பிரச்சினைகள் ஈரான் பெண்கள் கால்பந்து அணியில் இருக்கிறது.

எனவே, கோல்கீப்பர் சோஹ்ரே கவுடேய், மற்றும் பிற வீராங்கனைகள் அனைவருக்கும் “பாலின சரிபார்ப்பு சோதனை”  மேற்கொள்ள வேண்டும் என்றும், சுதந்திரமான மருத்துவ அமைப்பால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சோஹ்ரே கவுடேய் இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, “நான் ஒரு பெண். இவ்வாறு குற்றம்ச்சாட்டப்படுவது கொடுமை. ஜோர்டான்  கால்பந்து சங்கத்தின் மீது வழக்குத் தொடரப்போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |