Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அலட்சியம்…. டயரில் சிக்கி…. 2 வயது குழந்தை மரணம்…. பள்ளி வேன் டிரைவர் கைது….!!

காஞ்சிபுரத்தில் அலட்சியமாக வாகனம் ஒட்டி 2 வயது குழந்தையை கொன்ற பள்ளி வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை அடுத்த பெருநகர் புது காலனியில் வசித்து வருபவர் அருணகிரி. இவரது மகன் புனிதன். மகள் பொன்மதி. மகன் உத்திரமேரூர் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். பொன்மதி 2 வயது குழந்தை. இந்நிலையில் பொன்மதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது புனிதனை இறக்கிவிட வந்த பள்ளி வாகன ஓட்டுநர் பொன்மதியை கவனிக்கவில்லை.

இதையடுத்து புனிதன் இறங்கியதும் வாகனத்தின் முன்பு குழந்தை இருப்பதை பார்க்காமல் நேராக அவர் மீது ஏற்றி சென்று உள்ளார் டிரைவர். குழந்தை அலற வண்டியை நிறுத்தி தப்பி சென்றார் ஓட்டுநர். இதையடுத்து அவரது பெற்றோர்கள் வெளியே வந்து பார்க்க பொன்மொழி படுகாயங்களுடன் மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்த அவர்கள், அதே பெருநகர் பகுதியை சேர்ந்த வேன்டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |