மகாராஷ்டிராவில் புறப்பட தயாரான நிலையில் இருந்த விமானத்தின் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு 6E 636 என்ற எண் கொண்ட இன்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் ரன்- வேக்கு (Run- way) சென்று பறக்க தயாராக இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து விமானி நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, விமானத்தை ரன்- வேயிலிருந்து திருப்பி நிறுத்தும் இடத்திற்கு கொண்டு வந்தார். இதனால் நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது. இருப்பினும் விமானி சரியான நேரத்தில் தொழில்நுட்பக்கோளாறு கண்டறிந்தால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.