Categories
தேசிய செய்திகள்

IndiGo ‘sweet 16″: வெறும் ரூ.1,616-க்கு விமான டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் விமான டிக்கெட்டுகளின் விலையை விமான நிறுவனங்கள் அதிரடியாகக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆன நிலையில் பயணிகளுக்கு “Sweet 16″என்ற புதிய சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் அனைத்து உள்நாட்டு வழித்தடங்களிலும் ரூ.1,616- க்கு டிக்கெட்டை வழங்குகிறது.அதன்படி கா-சிங் கார்டுகளில்  1000 ரிவார்டு புள்ளிகள் வரை 6E வெகுமதியாக 25% கேஷ்பேக்கை பயணிகள் பெறுவர் என ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கு மாற்றாக, வாடிக்கையாளர்கள் HSBC கிரெடிட் கார்டுகள் மூலம் முன்பதிவு செய்து 5% கேஷ்பேக்காக ரூ.800 வரை பெறலாம் . அதன்படி ஆகஸ்ட் 18 முதல் 2023 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வரை பயணிகள் பயணிக்க இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை டிக்கெட் களை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இண்டிகோ இளையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது.

Categories

Tech |