இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ் குமாரின் தந்தை கிரண் பால் சிங் , கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவரின் தந்தை கிரண் பால் சிங் உத்திரபிரதேச மாநிலத்தில் காவல் துறையில் பணியாற்றியவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட புவனேஸ்வர் குமாரின் தந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 2 வாரங்களுக்கு ,முன் இவரின் உடல் நிலை மோசமானதால், மீரட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் உயிரிழந்தார்.இவரின் தந்தை மறைவிற்கு சக வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்