Categories
விளையாட்டு

இந்திய அணியினர் அனைவருக்கும் ….கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் …! இந்திய ஒலிம்பிக் சங்கம்…!!!

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்,வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் டோக்கியோவிற்கு புறப்படும் முன் , கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் முழுமையாக போடப்பட்டு இருக்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் ,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்புக் குழுவிற்கு உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான நரிந்தர் பத்ரா மற்றும் பொதுச் செயலாளரான ராஜீவ் மேக்தா ஆகியோர் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ‘ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள அனைவரின் ,பாதுகாப்பும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு முக்கியமானதாகும்.

இதனால் இந்திய அணி சார்பில் பங்குபெறும் அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, முடிந்த அளவிற்கு ஒலிம்பிக் சங்கம் எடுக்கும். போட்டிக்கு  புறப்படுவதற்கு முன்பாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள , அனைவரும் கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டு இருக்கும். இதற்கு முன்பாக பலரும் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு உள்ளனர். இதனால்  அடுத்த டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்வார்கள். ஒலிம்பிக் போட்டியை  முழு பாதுகாப்புடன் நடத்துவதற்காக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் ‘, என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |