Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய அணியுடன் இங்கிலாந்திற்கு’….! ‘ பயணம் செய்யும் தினேஷ் கார்த்திக்’…வெளியான தகவல் …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சுனில் கவாஸ்கர் மற்றும்  தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் 18 ம் தேதி இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடர்  ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தொடரில்  இடம்பெற்றுள்ள  வீரர்கள் வரும் ஜூன் 2 ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்படுகின்றனர்.  இதற்காக  25 வீரர்கள் , பயிற்சியாளர்கள்  அனைவரும் ‘பயோ பபுளில்’ தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இவர்களுடன் ,முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கரும் , தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கும் பயணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

இந்த டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றுபவர்கள், 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் , வர்ணனையாளராக பணியாற்ற அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் இந்த தனிமைப்படுத்தல் காரணத்தினால், முன்னணி வர்ணனையாளர்கள் இந்த வாய்ப்பை நிராகரித்ததால், சுனில் கவாஸ்கர் மற்றும்  தினேஷ் கார்த்திக் இருவரும்  இந்தப்போட்டியில் வர்ணனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் , இதனால் இருவரும் இங்கிலாந்திற்கு பயணிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Categories

Tech |